/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதலியுடன் பைக் சாகசம் பாக்கம் வாலிபருக்கு சிக்கல்
/
காதலியுடன் பைக் சாகசம் பாக்கம் வாலிபருக்கு சிக்கல்
காதலியுடன் பைக் சாகசம் பாக்கம் வாலிபருக்கு சிக்கல்
காதலியுடன் பைக் சாகசம் பாக்கம் வாலிபருக்கு சிக்கல்
ADDED : டிச 09, 2024 03:31 AM
அண்ணா நகர்,:திருநின்றவூர் அடுத்த, பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 28, தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, அண்ணா நகர் போலீசார் அவரை, நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
ராஜ்குமார், சென்னையில் கார் சர்வீஸ் செய்யும் கடையை, இரு ஆண்டுகளுக்கு முன் நடத்தி வந்தார். அப்போது, அவரது காதலியை பின்னால் அமரவைத்து பைக் சாகசத்தில் ஈடுபட்டு, அதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதள பக்கங்களில் ராஜ்குமார் பதிவிட்டார்.
காதலிக்கும், ராஜ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததால், அந்த வீடியோவை தற்போது மீண்டும் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரை கைது செய்து, அறிவுரை வழங்கி விடுவித்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், 'பைக் சாகசத்தில் யாரும் ஈடுபட வேண்டாம்' என, ராஜ்குமார் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.