/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிதவறி சென்ட்ரலில் சுற்றித் திரிந்த சிறுவன் பாட்டியிடம் ஒப்படைப்பு
/
வழிதவறி சென்ட்ரலில் சுற்றித் திரிந்த சிறுவன் பாட்டியிடம் ஒப்படைப்பு
வழிதவறி சென்ட்ரலில் சுற்றித் திரிந்த சிறுவன் பாட்டியிடம் ஒப்படைப்பு
வழிதவறி சென்ட்ரலில் சுற்றித் திரிந்த சிறுவன் பாட்டியிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 25, 2025 04:38 AM

எண்ணுார்: வழித்தவறி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திரிந்த சிறுவனை மீட்ட ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து உதவி ஆய்வாளர் உதவியுடன் எண்ணுாரில் உள்ள பாட்டி வீட்டில் ஒப்படைத்தார்.
திருவள்ளூர், பழவேற்காடைச் சேர்ந்த லோகேஷ், 12, எர்ணாவூர் குப்பத்தில் உள்ள தன் பாட்டி வீட்டில் தங்கி, அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயில்கிறார்.
நேற்று முன்தினம், பழவேற்காடில் தாயை பார்த்து விட்டு, மாலையில், மின்சார ரயில் மூலம் பாட்டி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
எண்ணுாரில் இறங்க வேண்டிய சிறுவன், வழித்தவறி சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுவிட்டார்.
அங்கு, ரயில் நிலையம் வெளியே, செய்வதறியாமல் சுற்றிக்கொண்டிருந்த லோகேஷிடம், மணலிபுதுநகர், விச்சூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வில்சன், 37, என்பவர் விசாரித்துள்ளார்.
சிறுவன் வழித்தவறி வந்ததை அறிந்து, எண்ணுார் போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜி என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வில்சன் பேசியுள்ளார்.
பின், தன் ஆட்டோவில் லோகேஷை அழைத்துச் சென்று, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜியிடம் ஒப்படைத்தார். அவர், எர்ணாவூர் குப்பத்தில் வசிக்கும், பாட்டி நாயகம் வீட்டில் சிறுவனை ஒப்படைத்தார்.
சிறுவனை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் வில்சன், உதவி ஆய்வாளர் ராஜியை, பலரும் பாராட்டினர்.

