/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் உடைந்த கண்ணாடி கதவு
/
ஏர்போர்ட்டில் உடைந்த கண்ணாடி கதவு
ADDED : அக் 20, 2024 12:31 AM

சென்னை,சென்னை விமான நிலையத்தில் 90 முறை கண்ணாடி கதவுகள் உடைந்த நிலையில், தற்போது மேலும் கண்ணாடி கதவு உடைந்ததுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர் ஐந்தாவது வாயில் வழியாக வெளியே வருவர். சிலர் 'டிரான்சிட்' பயணியராக, வேறு ஊர்களுக்கு செல்ல உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்வர்.
அப்படி வருவோர், உள்நாட்டு விமானங்களில் சுலபமாக செல்வதற்கு, மற்றொரு வாயில் வழியாக செல்வது வழக்கம். அங்கு ஒரு உணவகமும் செயல்படுகிறது. இதில் நுாற்றுக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சர்வதேச வருகை முனையத்தின் பக்கத்தில் உள்ள வாயிலில் கண்ணாடி கதவு ஒரு பக்கமாக உடைந்தது. அதை 'டேப்'' வைத்து, ஒட்டி, அவ்வழியே யாரும் செல்ல வேண்டாம் என, பயணியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாற்று வழியில் உள்நாட்டு விமான நிலையம் செல்ல வசதி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன்பு பயணியர் சிலர் அவ்வழியே சென்ற போது, அவர்களது உடைமைகள் மோதி கண்ணாடி கதவு ஒருபக்கம் உடைந்தது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற கண்ணாடி கதவுகள் போல் உடனடியாக மார்க்கெட்டில் கிடைப்பதில்லை. சேதமடைந்த கண்ணாடி ஓரிரு நாளில் மாற்றி பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.