ADDED : ஆக 13, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குண்டும், குழியுமாக மாறிய சாலை
தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், சிட்லப்பாக்கம் சந்திப்பை, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. அதிக போக்குவரத்து உடைய இந்த சந்திப்பில் இருந்து, ஏரிக்கரை சாலைக்கு செல்லும் இடத்தில், சில மீட்டர் துாரத்திற்கு குண்டும் குழியுமாக சாலை மாறிவிட்டது.
மெகா பள்ளங்கள் உள்ளதால், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி, விழுந்து அடிபடுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி, அந்த இடத்தில் சாலையை சீரமைக்க வேண்டும்.
- குடியிருப்புவாசிகள்,
சிட்லப்பாக்கம்.

