ADDED : செப் 30, 2024 12:24 AM

பரங்கிமலை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் கீழ், மின் வடம் பதிக்க, சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் சிக்காமல் இருக்க பேரிகாட் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பவன், 27, என்பவர், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை சென்று, நண்பர்களை அழைத்துக்கொண்டு, ஆந்திரா நோக்கி, 'சுசுகி பிரெஸ்ஸா' காரில் புறப்பட்டார்.
பூந்தமல்லி அருகே, காட்டுப்பாக்கத்தை கடந்து சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர இரும்பு தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.
காரில் பயணித்த ஐந்து பேரை, அப்பகுதியில் இருந்தோர் பத்திர மாக மீட்டனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கிரேன் இயந்திரம் வாயிலாக காரை மீட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

