/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணியை தடுத்த வளசை கவுன்சிலர் மீது வழக்கு
/
பணியை தடுத்த வளசை கவுன்சிலர் மீது வழக்கு
ADDED : அக் 06, 2024 12:18 AM
கோயம்பேடு,
மதுரவாயல், வி.ஜி.பி., அமுதா நகர் கூவம் கரையோரம், சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
இதை, தனியார் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம் 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'பணிகள் மேற்கொள்ளக்கூடாது' என, உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி, உதவி பொறியாளர் கலைச்செல்வி ஆகியோர், கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர். அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் மிரட்டல் என, இரு பிரிவுகளின் கீழ், கவுன்சிலர் ஸ்டாலின் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிந்தனர்.