/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துார்ந்து போய்விட்ட மழைநீர் கால்வாய்
/
துார்ந்து போய்விட்ட மழைநீர் கால்வாய்
ADDED : பிப் 04, 2025 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம் மாநகராட்சி 14வது வார்டு குரோம்பேட்டை, லட்சுமி நகர் விரிவு பகுதியில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் துார்ந்து போயுள்ளது.
லேசான மழை பெய்தாலே, அத்தெருவில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதேபோல், குப்பை முறையாக அகற்றப்படாததால், மற்றொரு புறம் கால்வாய் ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், ஓராண்டாக அகற்றப்படாமல் உள்ளது.
இது குறித்து பலமுறை இலவச புகார் எண்ணிலும், நேரிடையாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள்,
லட்சுமி நகர் விரிவு, குரோம்பேட்டை.

