/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறுதி ஊர்வலத்தை தடுத்தவரால் சலசலப்பு
/
இறுதி ஊர்வலத்தை தடுத்தவரால் சலசலப்பு
ADDED : ஜூலை 01, 2025 12:23 AM
புழுதிவாக்கம், பொது பாதையல்ல எனக்கூறி, இறுதி ஊர்வலத்தை தடுக்க முயன்றதாக தனிநபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புழுதிவாக்கம், ஜெயா நகர் முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சுமலதா, 43; அம்மா உணவக பணியாளர். இவரது மகள் புவனேஸ்வரி, 22; பட்டப்படிப்பு முடித்து, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
திடீரென, வேலைக்கு செல்லாமல் மேற்படிப்பு படிக்க செல்வதாக தாயிடம் பணம் கேட்டுள்ளார். குடும்ப சூழல், வறுமையால் சுமலதா மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி, நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
காவல்துறை விசாரணை முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று இறுதிச்சடங்கு நடந்தது. இதில், ஜெயா நகரில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில், ஆறுமுகம் என்பவர் 'இது பொது பாதை அல்ல' எனக்கூறி இறுதி ஊர்வலத்தை தடுக்க முயன்றுள்ளார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், பாதுகாப்புடன் உடலை சுடுகாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.