sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து இரவில் பைக்கில் சென்றவர் பரிதாப பலி

/

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து இரவில் பைக்கில் சென்றவர் பரிதாப பலி

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து இரவில் பைக்கில் சென்றவர் பரிதாப பலி

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து இரவில் பைக்கில் சென்றவர் பரிதாப பலி

3


ADDED : ஜூன் 13, 2025 12:35 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 12:35 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார், சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்று வழித்தடங்களில் நடக்கிறது. இதில் மாதவரம் - சோழிங்கநல்லுார் வரையிலான வழித்தடம், 44.6 கி.மீ., துாரம் உடையது.

இத்தடத்தில், போரூர் முதல் சென்னை வர்த்தகம் மையம் இடையே, பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை ரயில்வே பாலத்தின் கீழ், 30 அடி உயரத்தில், வாகனங்கள் செல்லும் வகையில் இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன.

இதற்காக இரு துாண்கள் இடையே ராட்சத கான்கிரீட் பாலங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், ராமாபுரம் 'எல் அண்டு டி' நிறுவனம் அருகே, 40 அடி உயரமுள்ள கான்கிரீட் பாலம், நேற்றிரவு 9:00 மணியளவில் சரிந்து சாலையில் விழுந்தது.

அப்போது, பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி பைக்கில் சென்ற, 35 வயது மதிக்கத்தக்க நபர், சரிந்து விழுந்த கான்கிரீட் கட்டுமானத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நந்தம்பாக்கம் போலீசார், பரங்கிமலை போக்குவரத்து போலீசார், மெட்ரோ ரயில்வே திட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலை முழுதும் தடுப்புகள் அமைத்தனர்.

இதையடுத்து, பூந்தமல்லி இருந்து பரங்கிமலை செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. கீழே விழுந்த கான்கிரீட் கட்டுமானங்கள், ராட்சத கிரேன் வாயிலாக அகற்றும் பணிகள் நடக்கின்றன.

இதை அகற்றிய பிறகே, அதன் அடியில் சிக்கியவரின் உடல் மீட்கப்படும் எனவும், மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது தெரியும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us