ADDED : மார் 03, 2026 05:39 AM

த னியார் நிறுவனங்களின் இணைய கேபிள்கள், அவர்கள் அமைத்துள்ள கம்பங்களில் மட்டுமல்லாது; சாலை நடுவே உள்ள தெரு விளக்கு கம்பங்களிலும் கட்டப்பட்டுள்ளன.
பல இடங்களில் அவை, 'சிலந்தி வலை' போன்று சுற்றப்பட்டு, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில், அபாய நிலையில் உள்ளன.
இந்நிலையில், அம்பத்துார் -- செங்குன்றம் பிரதான சாலையில், கள்ளிக்குப்பம், மேற்கு பாலாஜி நகர் சந்திப்பில், அந்நிறுவனங்கள், கேபிள்களை முறையாக பராமரிக்காததால், அவை, சாலையின் குறுக்கே அறுந்து தொங்குகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கழுத்தில் கேபிள் சிக்கி, விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, பாடி, சி.டி.எச்., சாலை, மண்ணுார்பேட்டை உட்பட பல இடங்களிலும் இந்த நிலைமை தான். உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஸ்ரீராம் குமார், அம்பத்துார்.
