ADDED : நவ 16, 2024 12:28 AM

அ நிறம் | அளவு
சென்னை, மெரினாவில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய, 13 அடி நீளமுள்ள டால்பினை, வனக்காப்பாளர்கள் அங்கேயே புதைத்தனர்.
மெரினா லுாப் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடி எதிரே, கடற்கரையில் நேற்று காலை, 11:00 மணியளவில், 13 அடி நீளமுள்ள டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த மீனவர்கள், மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மயிலாப்பூர் தலைமைக் காவலர் அருள்சிங் மேத்யூ, ஆறுமுகராஜ் ஆகியோர் விசாரித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
வண்டலுார் வனக்காப்பாளர்கள் வந்து, மதியம், 2:00 மணியளவில் அங்கேயே குழி தோண்டி, டால்பினை புதைத்தனர்.
