தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை

இறந்து கரை ஒதுங்கிய ஆமை


ADDED : ஜன 18, 2024 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2024 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் மார்ச் வரை, கடல் ஆமைகள் கரைக்கு வந்து, மணலில் குழிதோண்டி முட்டையிட்டு, மூடி வைத்து செல்லும். இதற்காக, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில், பாதுகாப்பு வளையம் அமைத்து, முட்டைகள் பாதுகாக்கப்படுகின்றன.

கடற்கரைக்கு வரும் ஆமைகள், கப்பல், படகில் அடிபட்டு காயமடையும். லேசான காயமடையும் ஆமைகள், கரைக்கு வந்து முட்டை போட்டு சென்றுவிடும்.

சில ஆமைகள் வரும் வழியில் இறந்துவிடும். அவை, சென்னை காசிமேடு முதல் கோவளம் இடையே இறந்த நிலையில் கரை ஒதுங்கி விடும். சமீபமாக ஆங்காங்கே பல ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. நேற்று காலை, பனையூர் கடற்கரையில் ஒரு ஆமை இறந்து கரை ஒதுங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us