ADDED : ஜன 18, 2025 12:23 AM
தி.மு.க., ஆட்சியில், ஜனநாயகத்திற்கு விரோதமான வகையில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதை, தேர்தல் கமிஷனும் கண்டுகொள்ளாது என்பதால், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்தது. தி.மு.க., அரசு மீது, தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வை மக்கள் ஆட்சியில் அமர்த்துவர்.
மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதியின் மகன் இன்பநிதி, அவரது நண்பர்கள் வருகைக்காக, மதுரை கலெக்டரை நிற்க வைத்துள்ளனர். இன்பநிதிக்கு அமைச்சர் மூர்த்தி சால்வை அணிவிக்கிறார். இது, தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடப்பதையே காட்டுகிறது.
புதுச்சேரியில் பா.ஜ., சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கவில்லை. பா.ஜ.,வுடன் தி.மு.க., கள்ளக்கூட்டணி வைத்திருப்பதற்கு இதுவே உதாரணம்.
- ஜெயகுமார்,
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்.