/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாவட்ட 'ஸ்குவார்ட்' சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி பெண் சாதனை
/
மாவட்ட 'ஸ்குவார்ட்' சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி பெண் சாதனை
மாவட்ட 'ஸ்குவார்ட்' சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி பெண் சாதனை
மாவட்ட 'ஸ்குவார்ட்' சாம்பியன்ஷிப் மாற்றுத்திறனாளி பெண் சாதனை
ADDED : டிச 22, 2024 12:21 AM

சென்னை,
சென்னை மாவட்ட வலு துாக்கும் சங்கம் மற்றும் சேலஞ்சர் ஜிம் சார்பில், மாவட்ட அளவிலான ஸ்குவார்ட் கிளாசிக் சாம்பியன்ஷிப் - 2024 போட்டி, திருவொற்றியூரில் நேற்று துவங்கியது.
இதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கும் தனிப்பிரிவு போட்டி நடத்தப்பட்டது.
நேற்று நடந்த மாற்றுத்திறனாளி பிரிவில், மனவளர்ச்சி குன்றியோரான அம்பத்துாரைச் சேர்ந்த ஸ்வேதா, 23, பங்கேற்றார்.
இவர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய இரு பிரிவுகளிலும் 40 கிலோ துாக்கி, முதலிடங்களை பிடித்து, தலா ஒரு தங்கம் வென்றார்.
மற்ற பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. இன்று மாலை இதே இடத்தில், 'பாடி பில்டிங்' போட்டியும் நடக்கிறது.