ADDED : மார் 16, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாவட்ட 'ஏ' டிவிஷன் வாலிபால் லீக் போட்டியில், முன்னணி எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், சென்னை மாவட்ட 'ஏ' டிவிஷன் வாலிபால் போட்டி, நேற்று மாலை எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் துவங்கியது.
இதில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, டி.ஜி.வைஷ்ணவா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஐ.சி.எப்., - வருமான வரி, கஸ்டம்ஸ் மற்றும் அக்னி பிரண்ட்ஸ் கிளப் ஆகிய எட்டு முன்னணி அணிகள் பங்கேற்று, கோப்பைக்கான கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.
மாலை துவங்கிய முதல் நாள் போட்டியை, சங்கத்தின் நிர்வாக துணை தலைவர் ராஜன், வருமான வரி கமிஷனர் பிரேமானந்த் ஆகியோர் துவங்கி வைத்தனர். போட்டிகள் தொடர்ந்து, 29ம் தேதி வரை தினமும் நடக்கின்றன.
