/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'‛தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி நியாயம் கேட்ட தி.மு.க., கவுன்சிலர்
/
'‛தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி நியாயம் கேட்ட தி.மு.க., கவுன்சிலர்
'‛தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி நியாயம் கேட்ட தி.மு.க., கவுன்சிலர்
'‛தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி நியாயம் கேட்ட தி.மு.க., கவுன்சிலர்
ADDED : பிப் 16, 2024 12:39 AM
அடையாறு, அடையாறு மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், 11 கவுன்சிலர்கள் மற்றும் சரவணமூர்த்தி, ராஜசேகர், புருசோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
குடிநீர் வினியோகம் முறையாக நடக்கவில்லை. கழிவுநீர் கலப்பு, முன் அனுமதி இல்லாமல் சாலை துண்டிப்பு, இதனால் குடிநீர் குழாய், மின் கேபிள் பழுது போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன என, கவுன்சிலர்கள் பேசினர்.
தொடர்ந்து, 174வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ராதிகா பேசியதாவது:
தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, 'அரசியல்வாதிகளுக்கு மாதந்தோறும் கட்டிங்' செல்வதால், பெசன்ட் நகர் கடற்கரையில் கடைகள் புற்றீசல் போல் அதிகரிப்பதாகவும், வாகன நிறுத்தத்திற்கு அதிக பணம் வசூலிப்பதாகவும், அக்., மாதம் முதல் தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகிறது.
அரசியல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதால், முதல்வர் அலுவலகத்தில் இருந்து என்னிடம் கேட்கின்றனர்.
போலீசாரும் விசாரிக்கின்றனர். எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், இப்படி செய்தி வெளியிடுவது நியாயமா?
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு, மண்டலக்குழு தலைவர் துரைராஜ், ''செய்தியில் அரசியல்வாதிகள் கட்டிங்' வாங்குகின்றனர் என்று தானே உள்ளது. கவுன்சிலர் ராதிகா கட்டிங்' வாங்கினார் என இல்லையே.
பொதுவாக செய்தி வெளியிட்டதை, நீங்கள் ஏன் உங்களை குறிப்பிட்டதாக நினைக்கிறீர்கள். இதற்கெல்லாம் எப்படி நியாயம் கேட்க முடியும்'' என பதில் அளித்தார்.
தொடர்ந்து, பல்வேறு பணிகள் தொடர்பாக, 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.