/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.12 கோடியில் கட்டியும் கைகொடுக்காத வடிகால்வாய்
/
ரூ.12 கோடியில் கட்டியும் கைகொடுக்காத வடிகால்வாய்
ADDED : மே 20, 2025 01:20 AM

குன்றத்துார், ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழை காலத்தில், மாங்காடு- - மவுலிவாக்கம் நெடுஞ்சாலையில் வெள்ள நீர் தேங்கி சாலை துண்டிக்கப்படுவதால், பரணிபுத்துாரில் அப்பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த சாலையில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, இந்த சாலையில், 4 கி.மீ., துாரத்திற்கு 12 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த கால்வாயில், மழை நீர் வெளியேறும் இணைப்புகள் சரிவர அமைக்கப்படாததாலும், சாலையை விட கால்வாய் உயரமாக உள்ளதாலும், சிறு மழைக்கே அப்பகுதியில் மழைநீர் தேங்குகிறது.
பரணிபுத்துார், பட்டூர், மவுலிவாக்கம் பகுதியில், குட்டை போல் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மழை நீர் வெளியேறும் வகையில், இந்த வடிகால்வாயை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.