ADDED : ஆக 29, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தகரை: அமைந்தகரையைச் சேர்ந்த ரேகா, 37, நான்கு சவரன் தாலி செயினை, வீட்டில் குளியறையில் வைத்து, மறந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் கழிப்பறையை சுத்தம் செய்ய வந்த ஒடிசா மாநிலம், பாலிஸ்வர் பகுதியைச் சேர்ந்த மானாஸ் குமார் ஜெனா, 35, அந்த தாலி செயினை திருடிச் சென்றுள்ளார். ரேகா புகாரையடுத்து, அவரை நேற்று கைது செய்த அமைந்தகரை போலீசார், செயினை மீட்டனர்.