மது போதையில் ரகளை
அம்பத்துார்: அம்பத்துார், பிரித்விப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மனோஜ், 27, மேனாம்பேடில் தான் நடத்தி வரும் 'டாட்டூ' கடையில், நண்பர் ஸ்ரீதர், 35, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு பேசி கொண்டிருந்தார்.
அப்போது கடை முன் நின்று, 10 வாலிபர்கள் மது அருந்தி, ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களை அங்கிருந்து கலைந்து போக சொன்ன மனோஜ் மற்றும் ஸ்ரீதரை, 10 பேர் சரமாரியாக தாக்கி, கடையின் கண்ணாடி மற்றும் பொருட்களை உடைத்து தப்பினர். அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
--
ஸ்கூட்டர் தீயிட்டு எரிப்பு
ஓட்டேரி: ஓட்டேரி, டேங்க் பண்ட் சாலையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வசந்தகுமார், 45, வீட்டிற்கு வந்த அவரது அண்ணன் மகன் விக்னேஷ், 25, குடியிருக்கும் வீட்டின் மேல் பகுதியை தங்களுக்கு எழுதி தருமாறு கூறி மது போதையில் வாக்குவாதம் செய்துள்ளார். பின், வசந்தகுமாரின் 'யமஹா ரேஸ்' ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்தினார். வழக்கு பதிந்த ஓட்டேரி போலீசார், விக்னேஷை கைது செய்தனர்.
--
நகையுடன் கைப்பை மாயம்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, டிம்ப்லர்ஸ் சாலையைச் சேர்ந்த பிரமிளா, 32, நேற்று முன்தினம் பெரம்பூரில் உள்ள தன் அண்ணன் வீட்டிற்கு சென்று, பின், ஆட்டோவில் வீடு திரும்பினார்.
வீட்டினுள் நுழைந்ததும், கைப்பை காணாமல் போனது தெரிந்தது. அதில், ஒரு சவரன் செயின், மொபைல்போன் மற்றும் ஆதார், பான் அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருந்துள்ளன. இது குறித்த பிரமிளா புகாரின்படி புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.