நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானகரம் வாலிபரை
தாக்கியவர் கைது
-
வானகரம் அருகே, நுாம்பலில் உள்ள தெருவீதியம்மன் கோவிலில் இம்மாதம் 17ம் தேதி திருவிழா நடந்தது. அப்போது, அதே பகுதி அபினேஷ்குமார், 26, பாலாஜி, 25, ஆகியோர் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதற்கு அடுத்த நாள், பாலாஜி, தன் நண்பர்கள் மூவருடன் சேர்த்து அபினேஷ்குமாரை காரில் கடத்தி சரமாரியாக தாக்கினர். ரத்த காயமடைந்த அபினேஷ்குமார் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வானகரம் போலீசார், திருவேற்காட்டைச் சேர்ந்த பாலாஜி, 25, என்பவரை நேற்று கைது செய்தனர்; மற்றவர்களை தேடி வருகின்றனர்.