sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டாசு வெடித்ததில் சுடுகாடு மின்மாற்றியில் தீ

/

பட்டாசு வெடித்ததில் சுடுகாடு மின்மாற்றியில் தீ

பட்டாசு வெடித்ததில் சுடுகாடு மின்மாற்றியில் தீ

பட்டாசு வெடித்ததில் சுடுகாடு மின்மாற்றியில் தீ


ADDED : பிப் 29, 2024 12:54 AM

Google News

ADDED : பிப் 29, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, மாநகராட்சி எரிவாயு தகன மேடை உள்ளது. இங்கு, குரோம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இறப்போரின் உடல்களை தகனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், குரோம்பேட்டை பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை தகனம் செய்வதற்காக, நேற்று மாலை துாக்கிச் சென்றனர்.

எரிவாயு தகனமேடை அருகே பட்டாசு வெடித்ததில் கிளம்பிய தீப்பொறி, அங்கு கிடந்த குப்பை மீது விழுந்து, தீ பற்றியது. அங்கு, நீண்ட நாட்களாக கிடந்த லோடு ஆட்டோவிலும் தீப்பற்றியது.

தாம்பரம் தீயணைப்பு துறையினர் வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

குப்பை அருகே மின்மாற்றி இருந்ததால், தீ விபத்தில் வடங்கள் எரிந்து, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

மேலும், அருகேயிருந்த தனியார் மருத்துவனையில், சி.டி., ஸ்கேன், எக்ஸ்ரே கருவி, கணிணி உள்ளிட்டவை வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. குரோம்பேட்டை போலீசார் விசாரித்துவருகின்றனர்.






      Dinamalar
      Follow us