/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பையில் பற்றி எரிந்த தீ புகையில் மூழ்கிய பொழிச்சலுார்
/
குப்பையில் பற்றி எரிந்த தீ புகையில் மூழ்கிய பொழிச்சலுார்
குப்பையில் பற்றி எரிந்த தீ புகையில் மூழ்கிய பொழிச்சலுார்
குப்பையில் பற்றி எரிந்த தீ புகையில் மூழ்கிய பொழிச்சலுார்
ADDED : மார் 27, 2025 11:50 PM
பல்லாவரம், பம்மலை அடுத்த பொழிச்சலுார் ஊராட்சி, 12வது வார்டு, ராதாகிருஷ்ணன் சாலை, மூவர் நகரில், குடியிருப்பு பகுதியில் காலி இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள மின்மாற்றி திடீரென வெடித்தது. தீ பொறி பரவி, குப்பை மீது விழுந்து, தீ பிடித்து எரிய துவங்கியது.
சற்று நேரத்தில், மளமளவென பரவி, அப்பகுதி முழுதும் புகை சூழ்ந்தது. இதனால், அப்பகுதிவாசிகள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டனர்.
பின், பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். இதுபோல், அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இது குறித்து, பல முறை புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விபரீதம் ஏற்படும் முன், இங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும் என, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.