/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.231 கோடியில் மேம்பாலம் வேளச்சேரியில் அமைகிறது
/
ரூ.231 கோடியில் மேம்பாலம் வேளச்சேரியில் அமைகிறது
ADDED : ஜூலை 12, 2025 12:16 AM
சென்னை, வேளச்சேரியில், 231 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க, மாநகராட்சி ஒப்பந்தம் கோரியுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வேளச்சேரி குருநானக் கல்லுாரியில் இருந்து புதிய மேம்பாலம் 310 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என, சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
தொடர்ந்து, வேளச்சேரி சர்தார் பட்டேல் சாலை - வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லுாரி 200 அடி சாலை சந்திப்பில், மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மாநகராட்சி கோரியுள்ளது.
அதன்படி, 3 கி.மீ., நீளத்திற்கு 231 கோடி ரூபாயில் இம்மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்டில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட உள்ளது.
இந்த பாலம் வாயிலாக, வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 7 லட்சம் பேர் பயன்பெறுவர்.
குருநானக் கல்லுாரி சந்திப்பு பீனிக்ஸ் மால் சந்திப்பு, ஐந்து பர்லாங் சாலை சந்திப்புகளில் ஏற்படும் நெரிசல் குறையும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.