/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆப்பிளை வீழ்த்திய செவ்வாழை; ஒரு பழம் ரூ.20க்கு விற்பனை
/
ஆப்பிளை வீழ்த்திய செவ்வாழை; ஒரு பழம் ரூ.20க்கு விற்பனை
ஆப்பிளை வீழ்த்திய செவ்வாழை; ஒரு பழம் ரூ.20க்கு விற்பனை
ஆப்பிளை வீழ்த்திய செவ்வாழை; ஒரு பழம் ரூ.20க்கு விற்பனை
UPDATED : அக் 01, 2024 06:31 AM
ADDED : அக் 01, 2024 12:54 AM

சென்னை: காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆப்பிள் விளைகிறது. அங்கிருந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு எடுத்து வரப்படுகிறது. ஆப்பிள் சீசன் களைகட்டி வருவதால், அதன் விலை குறைந்துள்ளது.
தற்போது, ஒரு கிலோ ஆப்பிள் 80 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு ஆப்பிள் 10 - 15 ரூபாய்க்கு கிடைக்கிறது.
அதேநேரம், இரண்டு மாதத்திற்கு முன், ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வாழை, தற்போது 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால், ஒரு பழத்தின் விலை 20 ரூபாயாக எகிறியுள்ளது. ஆப்பிளை விட செவ்வாழை கூடுதல் விலையில் விற்பனையாவதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செவ்வாழையை பொறுத்தவரை, நம் மாநிலம் மட்டுமல்லாது, கேரளாவிலும் அதிகளவில் விளைகிறது.
பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், பீஹார், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்து உள்ளது என, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.