/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ஆறுபேர் கும்பலுக்கு வலை
/
வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ஆறுபேர் கும்பலுக்கு வலை
வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ஆறுபேர் கும்பலுக்கு வலை
வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ஆறுபேர் கும்பலுக்கு வலை
ADDED : ஜூலை 24, 2025 12:49 AM
சேலையூர், சேலையூர் அருகே வாலிபரை காரில் கடத்த முயற்சி செய்து, இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கிய, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலையூரை அடுத்த மாடம்பாக்கம், ஏ.எஸ்.கே., நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் குமார், 35. எஸ்.எஸ்., ஸ்டீல் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, சேலையூரை அடுத்த திருவஞ்சேரி, அகரம்மெயின் ரோட்டில் வேலைக்கு தேவையான பொருட்கள் வாங்கும் கடை வாசலில் நின்றிருந்தார்.
அப்போது, வெள்ளை நிற ேஹாண்டா வெனியூவ் காரில் வந்த ஆறு பேர், ஜெகதீஷ் குமாரை காரில் கடத்த முயன்றனர்.
சுதாரித்து கொண்ட அவர், மர்ம நபர்களிடம் இருந்து தப்பித்து, அருகில் உள்ள கடைக்குள் ஓடினார். காரில் வந்தவர்கள் கீழே இறங்கி, இரும்பு பைப்பால் ஜெகதீஷ் குமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினர்.
இதில், காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.