/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆம்புலன்ஸ் மீது மோதிய அரசு பஸ் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
/
ஆம்புலன்ஸ் மீது மோதிய அரசு பஸ் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஆம்புலன்ஸ் மீது மோதிய அரசு பஸ் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஆம்புலன்ஸ் மீது மோதிய அரசு பஸ் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ADDED : செப் 22, 2024 06:38 AM

ஸ்ரீபெரும்புதுார், : ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் இருந்து நேற்று காலை, டாடா மேஜிக்' வாகனத்தில் இருவர், ஒரகடம் சென்றனர். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், பண்ருட்டி பி.எஸ்.பி., தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, பின்னால் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, டாடா மேஜிக் வாகனத்தின் பின்புறம் மோதியது.
இதில், டாடா மேஜிக் வாகனத்தில் பயணித்த, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன், 55, மற்றும் அவரது மனைவி ராதா, 50, ஆகியோருக்கு, தலையில் லேசான காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் உடனே, '108' அவசர கால ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில், காயமடைந்த இருவரையும் ஏற்றினர்.
அப்போது, வேலுாரில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, சாலையோரம் நின்ற இந்த ஆம்புலன்ஸ் மீது உரசி, கட்டுப்பாட்டை இழந்து மீடியனில் மோதியது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர், இடிபாடுகளில் சிக்கி லேசான காயமடைந்தனர்.
தகவலின்படி அங்கு வந்த ஒரகடம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, மற்றொரு ஆம்புலன்ஸ் வாயிலாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து வாகன ஓட்டுனர்களிடம், ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.