/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெம்மேலியில் பார்வைக்கு வைக்கப்பட்ட பிரமாண்ட குழாய்
/
நெம்மேலியில் பார்வைக்கு வைக்கப்பட்ட பிரமாண்ட குழாய்
நெம்மேலியில் பார்வைக்கு வைக்கப்பட்ட பிரமாண்ட குழாய்
நெம்மேலியில் பார்வைக்கு வைக்கப்பட்ட பிரமாண்ட குழாய்
ADDED : மார் 01, 2024 12:41 AM

மாமல்லபுரம், சென்னை அடுத்த நெம்மேலியில், பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் கீழ், 1,516.82 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரிலிருந்து தினசரி 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை செயல்பட துவங்கியுள்ளது. இந்த ஆலையில், நாட்டிலேயே அதிகபட்ச விட்டம் கொண்ட கடல்நீரை உள்வாங்கும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரி, ஆலை வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பெருநகர் குடிநீர் வாரிய பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
இந்திய கடற்பகுதியில், அதிகபட்ச விட்ட அளவு கொண்ட குழாயை இங்கு தான் அமைத்துள்ளோம். ஆசியாவிலேயே அதிகபட்ச விட்டம் கொண்ட குழாயாகவும் இருக்கலாம்.
கடற்கரையிலிருந்து, 1,035 மீட்டர் நீளத்திற்கு, கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் ஆழத்தில், இக்குழாய் அமைக்கப்பட்டுஉள்ளது. கடல்நீரை உந்தி அனுப்பும் மோட்டார் அமைப்பு இதில் கிடையாது. நீரின் அழுத்தத்தில், தாமாக உந்தும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

