/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை வந்த மதுரை நபர் நண்பர் வீட்டில் தற்கொலை
/
சென்னை வந்த மதுரை நபர் நண்பர் வீட்டில் தற்கொலை
ADDED : பிப் 22, 2024 12:44 AM
ஆவடி, மதுரையைச் சேர்ந்தவர் அழகர் ராஜன், 34. இவர், 'ஆன்லைன் ஷேர் மார்க்கெட்' தொழில் செய்து வந்தார். இதில், பல லட்சம் ரூபாய் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடன் தொல்லை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் அழகர் ராஜன் சென்னை வந்துள்ளார். நண்பரை பார்ப்பதற்காக, நேற்று காலை அயப்பாக்கம், மருதம் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
அவரது நண்பர் வேலைக்கு சென்ற வேளையில், வீட்டில் தனியாக இருந்த அழகர் ராஜன், மன விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார், அழகர் ராஜனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.