/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனநலம் பாதித்தவர் பேக்கரியில் ரகளை
/
மனநலம் பாதித்தவர் பேக்கரியில் ரகளை
ADDED : அக் 02, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார், கொளத்துாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,42. பெரவள்ளூரில் பேக்கரி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த நபர், வீண் தகராறு இழுத்துள்ளார். திடீரென ஆவேசமடைந்து, பேக்கரியில் இருந்த பொருட்களை சாலையில் துாக்கி வீசி ரகளை செய்துள்ளார்.
அப்போது அவ்வழியே வந்த ரோந்து போலீசார், போதை ஆசாமியை கட்டுப்படுத்த முற்பட்டனர். ஆனால் போலீசாரிடமும் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.
அவரை மடக்கிப்பிடித்து விசாரித்த போது, பெரவள்ளூரை சேர்ந்த யோகேஷ்குமார்,40 என்பதும், மனநலம் பாதித்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் யோகேஷ்குமாரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.