/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விவேகானந்தா கல்லுாரிக்கு ரூ.7.20 கோடியில் நவீன ஆய்வகம்
/
விவேகானந்தா கல்லுாரிக்கு ரூ.7.20 கோடியில் நவீன ஆய்வகம்
விவேகானந்தா கல்லுாரிக்கு ரூ.7.20 கோடியில் நவீன ஆய்வகம்
விவேகானந்தா கல்லுாரிக்கு ரூ.7.20 கோடியில் நவீன ஆய்வகம்
ADDED : அக் 02, 2024 12:11 AM

சென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில், ராமகிருஷ்ணா மிஷனுக்கு சொந்தமான ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரி உள்ளது. அங்கு, 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
பொதுத்துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி., நிறுவனம், சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், 7.20 கோடி ரூபாய் செலவில், விவேகானந்தா கல்லுாரியில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய துறைகளில் உள்ள ஆய்வகங்களை புதுப்பித்துள்ளது.
அந்த ஆய்வகங்களுக்கு அதிநவீன ஆய்வு கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இது தவிர, 120 பேர் அமரும் வகையில், சிறந்த ஒலி வசதியுடன் கூடிய கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, விவேகானந்தா கல்லுாரி செயலர் சுவாமி தியானகம்யானந்தா கூறியதாவது:
தற்போது, பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கல்லுாரியில் உள்ள ஆய்வகங்களுக்கு அழைத்து வந்து செயல் விளக்கம் அளிக்கப்படும்.
சிறப்பான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு நன்றி. முன்னாள் மாணவர்களும் கல்லுாரிக்கு உதவ முன்வர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

