ADDED : பிப் 05, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழல், கதிர்வேடு பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பூங்கொடி, 42. இவர், நேற்று முன்தினம் மாலை, தன் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர, பேருந்தில் கொளத்துாருக்கு சென்றார்.
பின், இருவரும் விநாயகபுரத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்ம நபர்கள், பூங்கொடியின் 3 சவரன் செயினை பறித்து தப்பினர்.
புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

