/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு மருத்துவமனைக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டடம்
/
அடையாறு மருத்துவமனைக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டடம்
அடையாறு மருத்துவமனைக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டடம்
அடையாறு மருத்துவமனைக்கு ரூ.9 கோடியில் புதிய கட்டடம்
ADDED : ஏப் 22, 2025 12:55 AM

அடையாறு, அடையாறு மண்டலம், 173வது வார்டு, அடையாறு வெங்கடரத்தினம் நகர் பிரதான சாலையில், 30 படுக்கை வசதி கொண்ட மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளது.
இதை ஒட்டி, 6,550 சதுர அடி பரப்பில் காலி இடம் உள்ளது. இதன் முகப்பு பகுதி, இந்திரா நகர் ஒன்றாவது அவென்யூவில் அமைகிறது.
இந்த இடத்தில், 70 படுக்கை வசதி மருத்துவமனை கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 9.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், நான்கு மாடி கொண்ட கட்டடத்தில், ஒவ்வொரு தளமும், 4,260 சதுர அடி பரப்பு வீதம் அமைகிறது. மொட்டை மாடி, 1,335 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதில், 70 படுக்கை வசதி, இ.சி.ஜி., எக்ஸ்ரே, தடுப்பூசி சேமிப்பு அறை, மருந்தகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது.
இந்த கட்டடம், 30 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மருத்துவமனையுடன் இணைக்கப்பட உள்ளது. இதனால், 100 படுக்கை வசதி கொண்டதாக மாற உள்ளது.
கட்டுமான பணி துவங்கியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.