/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மேம்பாலத்தில் பள்ளம் பெருச்சாளி கண்டுபிடித்த புது 'ரூட்'
/
தாம்பரம் மேம்பாலத்தில் பள்ளம் பெருச்சாளி கண்டுபிடித்த புது 'ரூட்'
தாம்பரம் மேம்பாலத்தில் பள்ளம் பெருச்சாளி கண்டுபிடித்த புது 'ரூட்'
தாம்பரம் மேம்பாலத்தில் பள்ளம் பெருச்சாளி கண்டுபிடித்த புது 'ரூட்'
ADDED : ஏப் 10, 2025 12:39 AM

தாம்பரம், தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இதை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. முக்கியமான இம்மேம்பாலத்தை முறையாக பராமரிப்பதில்லை.
இந்நிலையில், மேம்பாலத்தில் இருந்து, தாம்பரம் பேருந்து நிலையம் மார்க்கமாக இறங்கும் மேம்பாலத்தில், ரேம்ப் முடிந்து தார் சாலை துவங்கும் இடத்தில், நேற்று இரவு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, பள்ளம் ஏற்பட்ட இடத்தை சுற்றி தடுப்பு அமைத்து, விபத்து ஏற்படாமல் தடுத்தனர்.
தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டதற்கு பெருச்சாளியே காரணம் என்பது தெரியவந்தது.
அது, கொஞ்சம் கொஞ்சமாக சாலையை குடைந்து, பள்ளத்தை உண்டாக்கியதும் தெரிந்தது. இதையடுத்து, ஜல்லி கலவையை கொண்டு, நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை மூடினர். அதன்பின், போக்குவரத்து சீரானது.
அதனால், தாம்பரம் மேம்பாலத்தில் மீண்டும் பெருச்சாளியால் பள்ளம் ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.