/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில்முனைவோரை ஊக்குவிக்க புது திட்டம்
/
தொழில்முனைவோரை ஊக்குவிக்க புது திட்டம்
ADDED : ஜன 09, 2024 12:37 AM

தண்டலம்,ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள், பேராசிரியர்களுக்கிடையே, தொழில்முனைவோர் திறமைகளை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு 'ஸ்டார்ட் அப் இன்குபேஷன்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜலட்சுமி கல்வி குழும தலைவர் தங்கம் மேகநாதன், துணை தலைவர் அபய் மேகநாதன் ஆகியோரின் தலைமையில், வளரும் தொழில்முனைவோருக்கு யோசனையிலிருந்து வணிக ரீதியான துவக்கம் வரை, கட்டமைக்கப்பட்ட செயல்முறை மூலம் ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
இக்கல்லுாரியில் இந்தாண்டில் தொழில்நுட்பம், பயோ டெக்னாஜி மற்றும் நிலையான தீர்வுகளை காண்பதற்காக, பல துறைகளை மையப்படுத்தி 25 'ஸ்டார்ட்- அப்' நிறுவனங்களுக்கு செறிவூட்டு அளிப்பதற்கான நோக்கத்தை இத்திட்டம் கொண்டுள்ளது.
கருத்து உருவாக்கம், கருத்து நடைமுறை சரிபார்ப்பு, முன்மாதிரி உருவாக்குதல் என, பல நிலைகள் இத்திட்டத்தில் உள்ளன.
சமர்ப்பிக்கப்படும் கருத்துக்களின் செயல்முறைகளை நெறிமுறைப்படுத்துவதற்காக, புதுமையான கருத்துக்களின் தெளிவான தகவல் தொடர்புக்கு, ஒரு பக்க 'டெம்பளேட்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.