/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கோகைன்' வியாபாரியாக கொடிகட்டி பறந்த நைஜீரியர்
/
'கோகைன்' வியாபாரியாக கொடிகட்டி பறந்த நைஜீரியர்
ADDED : பிப் 13, 2024 12:36 AM
அமைந்தகரை, சென்னையில் பல்வேறு பகுதிகளில், 'கோகைன்' போதை பொருள் விற்ற வழக்கில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜாகுசினேடு ஓனாச்சி, 47, அவரது மனைவி லியோனி, 50, மற்றும் அமே சீயோன் இனலெக்வு, 40, ஆகியோர், அமைந்தகரை போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர்களிடமிருந்து, 1.250 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், பிரதான குற்றவாளியான அஜாகுசினேடு ஓனாச்சியை, உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, கடந்த 30ம் தேதி, 14 நாட்கள் காவலில் போலீசார் விசாரித்தனர். பின், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் தெரியவந்ததாவது:
சென்னையில் முக்கிய தொழிலதிபர்களுக்கு, அஜாகுசினேடு ஓனாச்சி 'கோகைன்' விற்பனை செய்து வந்துள்ளார். அவர் பல்வேறு வங்கிகள் வாயிலாக, நைஜீரியாவுக்கு பணம் பரிமாற்றம் செய்திருப்பது தெரிந்தது.
அஜாகுசினேடு ஓனாச்சி சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய 'கோகைன்' வியாபாரியாக வலம் வந்துள்ளார். இவர் வாயிலாக தான் தமிழகம் முழுதும் கோகைன் விற்பனை நடந்து வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.