/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிசை தீப்பிடித்து உத்தண்டி நபர் பலி
/
குடிசை தீப்பிடித்து உத்தண்டி நபர் பலி
ADDED : பிப் 17, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கானத்துார், இ.சி.ஆர்., உத்தண்டியைச் சேர்ந்தவர் ஆண்டனிராஜ், 46. மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டில், வண்ணம் பூச்சு வேலை நடக்கிறது.
இதனால், நேற்று முன்தினம் இரவு, மனைவி, குழந்தைகள் வீட்டிலும், ஆண்டனிராஜ் மாடியில் உள்ள குடிசையிலும் துாங்கினர்.
நள்ளிரவு, மின் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, குடிசை தீப்பிடித்தது. இதில், துாங்கிக்கொண்டிருந்த ஆண்டனிராஜ், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார். கானத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.