ADDED : பிப் 13, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, சென்னை மணலி, திரு.வி.க., தெருவைச் சேர்ந்த அனில்குமார், 51; திருமணமாகவில்லை. நேற்று மாலை, காமராஜர் சாலை, தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென நிலை தடுமாறி கீழே மயங்கி விழுந்துள்ளார். அப்போது, சி.பி.சி.எல்., சந்திப்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லுாரி பேருந்து பின் சக்கரத்தில், அனில்குமாரின் தலை சிக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனரான, மணலி, சின்னமாத்துாரைச் சேர்ந்த பழனிசாமி, 50, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.