/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையின் நடுவே தோண்டிய பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்
/
சாலையின் நடுவே தோண்டிய பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்
சாலையின் நடுவே தோண்டிய பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்
சாலையின் நடுவே தோண்டிய பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்
ADDED : ஜன 06, 2025 01:45 AM

ஷெனாய் நகர்:சாலையின் நடுவே, வாரியத்தால் குழாய் பதிக்கும் பணிக்காக, பல மீட்டர் தோண்டிய பள்ளத்தை, முறையாக சீரமைக்காமல் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், அமைந்தகரை அருகில், ஷெனாய் நகர், புல்லா அவென்யூ உள்ளது.
இங்கு, புல்லா அவென்யூ பிரதான சாலை உட்பட பல்வேறு தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.
குடிநீர் வாரியத்தால், இப்பகுதி வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குழாயில் பிரச்னை இருந்தது. இதனால், குழாயை மாற்ற வாரிய திட்டமிட்டது.
இதற்காக வாரியம், ஓராண்டுக்கு முன், சாலையின் நடுவே பழைய குழாயை அகற்றி, புதிதாக பதித்தது.
புல்லா அவென்யூ முதல் தெருவில் இருந்து, கிழக்கு கிளப் சாலை, நாதமுனி தெரு வழியாக மூன்று சாலைகளுக்கு மேல் பள்ளம் தோண்டி, பணியை நிறைவு செய்தது.
பின், பணிகள் நிறைவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், பள்ளத்தை முறையாக சீரமைக்காமல், மண்ணை மட்டும் அகற்றி, அப்படியே விட்டுவிட்டனர். இதனால், பல மீட்டர் துாரம் சாலையில் நடுவே பள்ளமாக உள்ளது.
கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், மண் உள்வாங்கி, சாலை மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
சாலையில், திட்ட பணிகளை மேற்கொள்ளும் துறைகளிடம் மாநகராட்சி வசூலிக்கும் நிதியை பயன்படுத்தி, இப்பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

