/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்குட்டையில் விழுந்த பிளம்பர் உயிரிழப்பு
/
கல்குட்டையில் விழுந்த பிளம்பர் உயிரிழப்பு
ADDED : நவ 22, 2024 12:17 AM
மடிப்பாக்கம்,
திருநெல்வேலி அடுத்த, சங்கரன்கோவில், குருவிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி, 44; கோயம்பேடில் தங்கி, பிளம்பிங் பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம், கீழ்கட்டளை, அன்பு நகர் தனியார் நிறுவனத்தில், பழுதடைந்த குடிநீர் குழாய் இணைப்பை சரிசெய்ய, சரவணன் என்பவருடன் வந்துள்ளார்.
பணி முடிந்ததும், அருகே உள்ள கல்குட்டை பக்கம், இயற்கை உபாதையை கழிக்க சென்ற மாடசாமி, வெகுநேரமாகியும் திரும்பவில்லை.
கல்குட்டை நீரில் தவறி விழுந்த மாடசாமியை, அப்பகுதியைச் சேர்ந்தோர் மீட்டு, குரோம்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனையில், மாடசாமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மடிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.