/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையின் குறுக்கே பள்ளம் கந்தன்சாவடியில் பாதிப்பு
/
சாலையின் குறுக்கே பள்ளம் கந்தன்சாவடியில் பாதிப்பு
ADDED : மே 19, 2025 01:56 AM

பெருங்குடி:பெருங்குடி மண்டலம், வார்டு 182க்கு உட்பட்டது கந்தன்சாவடி. இப்பகுதியிலுள்ள சந்தோஷ் நகர், சாந்தி நகரில் பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில், 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், 1,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன.
இந்நிலையில், சந்தோஷ் நகர் பிரதான சாலை தான், இப்பகுதிவாசிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு முக்கிய போக்குவரத்தாக உள்ளது.
இச்சாலையின் குறுக்கே மூன்று நாட்களுக்கு முன், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக மெட்ரோ துறையினரால் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்கள் செல்ல வழியின்றி, பல தெருக்கள் சுற்றிவரும் சூழல் உள்ளது.
அதுமட்டுமின்றி, கனரக வாகனங்கள் வந்து செல்ல வழியின்றி, உற்பத்தி பொருட்களை ஏற்ற முடியாமல், பொருட்கள் தொழிற்சாலையிலேயே தேங்கியுள்ளன. இதனால், உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
திட்டப்பணியை பகுதி, பகுதியாக செய்யாமல், ஒட்டுமொத்தமாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் தான், பகுதிவாசிகளும், தொழிற்சாலை உரிமையாளர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, குறிப்பிட்ட சாலையில், விரைவாக பணியை முடிக்க, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.