/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் பள்ளம் ஓட்டேரியில் அபாயம்
/
சாலையில் பள்ளம் ஓட்டேரியில் அபாயம்
ADDED : பிப் 10, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, பெரம்பூர், ஓட்டேரி குக்ஸ் சாலை சந்திப்பில், மழைநீர் கால்வாய் மூடி உடைந்தும், இரண்டு இடங்களில் சாலை பள்ளமாகியும் போக்குவரத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியும் வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கால்வாய் மூடி லேசாக சேதமாகி இருந்தது.
தற்போது, போக்குவரத்தால் மூடி முழுதுமாக உடைந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதிவாசிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் தடுப்பு அமைத்து, வாகன ஓட்டிகளை எச்சரித்து வருகின்றனர்.