/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1 லட்சம் லிட்டர் குடிநீர் வீணடித்த தனியார் நிறுவனம்
/
1 லட்சம் லிட்டர் குடிநீர் வீணடித்த தனியார் நிறுவனம்
1 லட்சம் லிட்டர் குடிநீர் வீணடித்த தனியார் நிறுவனம்
1 லட்சம் லிட்டர் குடிநீர் வீணடித்த தனியார் நிறுவனம்
ADDED : பிப் 16, 2024 12:40 AM
தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம், மேலச்சேரி, பழையசீவரம் உள்ளிட்ட பாலாறு ஓடும் இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய் வழியாக எடுத்து வரப்படும் குடிநீர், மேற்கு - கிழக்கு தாம்பரங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கிழக்கு தாம்பரத்திற்கான பிரதான குழாய், இரும்புலியூர் டி.டி.கே., நகர் சுரங்கப்பாதை வழியாக செல்கிறது. நேற்று முன்தினம் இரவு, சுரங்கப்பாதை அருகே கேபிள் செலுத்தும் பணியில், தனியார் நிறுவனம் ஈடுபட்டது. அப்போது, அஜாக்கிரதையால், குடிநீர் குழாயை உடைத்தனர்.
தண்ணீர் அதிகளவு வெளியேறி, ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் ஆறாக ஓடி வீணாகியது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து, குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, உடைப்பை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு, உடைப்பு சரிசெய்யப்பட்டு, குடிநீர் வினியோகம் சீரானது. குழாயை உடைத்த தனியார் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.