ADDED : ஏப் 12, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
மயிலாப்பூர்: வழிபாட்டு பொருட்களை கழிவுகளாக கருதாமல், அவற்றை மீண்டும் இயற்கையோடு இணைக்கும் பணியை உத்வசேனா எனும் தன்னார்வலர்கள் அமைப்பு செய்து வருகிறது.
கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜிக்கப்பட்ட மலர்களைச் சேகரித்து, அவற்றை உரமாக்குதல் உள்ளிட்டவற்றை மறு சுழற்சி முறையில், இந்த அமைப்பு கையாண்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாப்பூர், டி.வி.ஆர்., சுப்பி செட்டி வசந்த மண்டபத்தில், இன்று காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, வீடுகளில் பயன்பாடு இல்லாத ஆன்மிக பொருட்களை சேகரிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்வை பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.
