/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் பொதுவிருந்து
/
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் பொதுவிருந்து
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் பொதுவிருந்து
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் பொதுவிருந்து
ADDED : பிப் 04, 2024 05:28 AM

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, அண்ணா நினைவு நாளான நேற்று சென்னை, புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.
சென்னை, மயிலாப்பூர், மாதவப்பெருமாள் கோவிலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம்;
பாம்பன் சுவாமி கோவிலில் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அனைவரும் பக்தர்களுடன் உணவருந்தி, ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலைகளையும் வழங்கினர். இதபோல, சென்னை, புறநகரில் உள்ள, 33 கோவில்களில் நடந்த நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், எம்.பி., ஏ.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
***