/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு வாசலில் வளர்ந்துள்ள மரக் கிளையை அகற்ற கோரிக்கை
/
வீட்டு வாசலில் வளர்ந்துள்ள மரக் கிளையை அகற்ற கோரிக்கை
வீட்டு வாசலில் வளர்ந்துள்ள மரக் கிளையை அகற்ற கோரிக்கை
வீட்டு வாசலில் வளர்ந்துள்ள மரக் கிளையை அகற்ற கோரிக்கை
ADDED : டிச 28, 2024 01:49 AM

அயனாவரம்:அண்ணா நகர் மண்டலம், அயனாவரம், பெரியார் சாலையைச் சேர்ந்தவர் லதா, 81. இவரது வீட்டின் வாசலில், இடையூறாக வளர்ந்துள்ள மரத்தின் கிளையை அகற்ற வேண்டும் என, சென்னை மாநகராட்சிக்கு பல முறை புகார் அளித்தும் இது வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இது குறித்து மூதாட்டி கூறியதாவது:
சொந்த ஊரில் வசித்த நான், கடந்த சில மாதங்களுக்கு முன், அயனாவரம் வீட்டிற்கு வந்தேன். அங்கு, வீட்டின் நுழைவாயிலில் போக்குவரத்து இடையூறாக புங்கை மரம் வளர்ந்துள்ளது. அதன் கிளையை அகற்றித்தரக்கோரி, மாநகராட்சியிடம் புகார் அளித்தால், 'மரத்தை வெட்டக்கூடாது; வனத்துறையிடம் தெரிவியுங்கள்' எனக் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.