/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனியில் திருக்கல்யாணம் விமரிசை
/
வடபழனியில் திருக்கல்யாணம் விமரிசை
ADDED : நவ 09, 2024 12:31 AM

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 1ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமாள், மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில், விழாவின் இறுதி நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு மாலை சீர்வரிசை புறப்பாடு தொடர்ந்து, சர்வ அலங்காரத்துடன் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் மணமேடைக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்தார்.
தொடர்ந்து, சுவாமிக்கு பாலும், பழமும் வழங்கப்பட்டது. பின், மாங்கல்ய தாரணம் நடந்தது. அடுத்து, பூர்ணாஹுதி நிறைவு பெற்று, ரக்ஷை சார்த்தும் நிகழ்வை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.
பின், பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது. மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்று முதல், 12ம் தேதி வரை, இரவு 7:00 மணிக்கு முறையே, வடபழனி ஆண்டவர் மங்களகிரி விமானப் புறப்பாடு; சொக்கநாதர், மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்தி புறப்பாடு; வடபழனி ஆண்டவர் புறப்பாடு ஆகியவை நடக்கிறது.