தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கவிழ்க்கும் பட்ஜெட்.

கவிழ்க்கும் பட்ஜெட்.

கவிழ்க்கும் பட்ஜெட்.


ADDED : பிப் 20, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீன்கள் இனவிருத்தி யாகும், எண்ணுார் - கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் உட்பட பல இடங்களில், மேம்பாடு திட்டம் என்ற பெயரில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும். மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த எந்த திட்டமும் கிடையாது. இது, மீனவர்களை கவரும் பட்ஜெட் அல்ல; கவிழ்க்கும் பட்ஜெட்.

நாஞ்சில் பி.ரவி,

- தலைவர்,

அனைத்து மீனவர் சங்கம், காசிமேடு.

நேற்று வந்த கிளாம்பாக்கத்தை ஒப்பிடும்போது வடசென்னையில் மனைகள் விலை குறைவு தான். போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்கு காரணம். சாலை, சீரான போக்குவரத்து, குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தினால் விரைவாக வளர்ச்சியடையும்.

- குமார், 45,

வியாபாரி,கொத்தவால்சாவடி

ஆவடி புதிய ராணுவ சாலைக்கு 352 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அதே சமயத்தில் அடிப்படை தேவையான பாதாள சாக்கடை திட்டம் இன்று வரை கிடப்பில் உள்ளது. இதை முழுதும் முடித்த பின், சாலை திட்டத்தை துவங்கினால் சிறப்பாக இருக்கும். பூந்தமல்லியில் திரைப்பட நகரம் அமைப்பது, பலருக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். அப்பகுதி, பல்வேறு வழிகளில் அசுர வளர்ச்சியை எட்டும்.

- சடகோபன்,

சமூக ஆர்வலர், ஆவடி

வடசென்னை மட்டுமல்ல, வடசென்னை மக்களும் கூட வளரவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், வறுமை என, ஏதாவது ஒரு பாதிப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒதுக்கியதாக கூறும் நிதியில் உருப்படியான வளர்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்.

- பெர்லி, 36,

குடும்ப தலைவி, கொளத்துார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us