/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோர் மருத்துவமனையில் ரூ.900 கட்டணத்தில் அறை
/
முதியோர் மருத்துவமனையில் ரூ.900 கட்டணத்தில் அறை
ADDED : செப் 29, 2024 12:46 AM
சென்னை, கிண்டி முதியோர் நல மருத்துவமனையில், 900 ரூபாய் மதிப்பில், 20 கட்டண படுக்கை அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை, கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 43 பேருக்கு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று பணி ஆணைகள் வழங்கினார். பின், 21.70 லட்சம் மதிப்பில் அவசர ஊர்தி சேவையையும் துவக்கி வைத்தார்.
இதையடுத்து, அவர் அளித்த பேட்டி:
கடந்த பிப்., 25ல் துவங்கப்பட்ட, தேசிய முதியோர் நல மருத்துவமனையில், புறநோயாளிகளாக 1.12 லட்சம் பேரும், உள்நோயாளிகளாக 3,267 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இம்மருத்துவமனையில், 200 படுக்கை வசதிகள், 40 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன. மேலும், தினமும், 900 ரூபாய் கட்டணத்தில், 20 படுக்கை அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கட்டணத்தில், நோயாளிகளுக்கு உணவும் வழங்கப்படும்.
மருத்துவமனையில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மேலும், 8 கோடி ரூபாய் மதிப்பில் எம்.ஆர்.ஐ., பரிசோதனை கருவி விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.