/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு தனி கட்டடம்; திட்ட அறிக்கை தயாரிப்பு
/
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு தனி கட்டடம்; திட்ட அறிக்கை தயாரிப்பு
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு தனி கட்டடம்; திட்ட அறிக்கை தயாரிப்பு
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு தனி கட்டடம்; திட்ட அறிக்கை தயாரிப்பு
ADDED : ஜன 02, 2024 12:45 AM
சென்னை, சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு தனியாக கட்டடம் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மாநகராட்சி தயாரிக்க உள்ளது.
சென்னை மாநகராட்சி, 200 வார்டுகளை கொண்டுள்ளது. இவற்றின் நிர்வாக வசதிக்காக, மூன்று வட்டாரங்களாகவும், 15 மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பெருநகர மாநகராட்சியாக இருப்பதால், இதன் செயல்பாடுகளை அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையின் வளர்ச்சிக்கு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஒவ்வொரு மாதமும், மாதந்திர கவுன்சில் கூட்டம், ரிப்பன் மாளிகையில் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டம் நடைபெறும் வளாகத்தில் போதியளவு இடவசதி இல்லாத நிலை உள்ளது.
இதனால், கவுன்சிலர்கள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் என, அனைவரும் இட நெருக்கடியில் அமர வேண்டிய நிலையே உள்ளது. எனவே, கவுன்சில் கூட்டத்திற்கு வேறு தனியாக பிரத்யேக கட்டடம் கட்ட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்திலேயே, தனியாக கவுன்சில் கூட்டத்திற்கு கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தில், கவுன்சிலர்கள், மாநகராட்சி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சேவை துறை அதிகாரிகளும் அமரக்கூடிய வகையில் கட்டடம் அமையும். இதன் வாயிலாக, இட நெருக்கடி குறைப்பதுடன், அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் அமைப்பதால், மக்களின் குறைகளை கவுன்சிலர்கள் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

