/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளஸ் 2 மாணவர் மீது சரமாரி தாக்குதல்
/
பிளஸ் 2 மாணவர் மீது சரமாரி தாக்குதல்
ADDED : ஆக 03, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகப்பேர், பிளஸ் 2 மாணவர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய சக மாணவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில், பிளஸ் 2 பயிலும் மாணவர், நேற்று முன்தினம் பள்ளி முடிந்து, நண்பர்களுடன் பள்ளி அருகே உள்ள டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே பள்ளியில் பயிலும் ஆறுக்கும் மேற்பட்ட மாணவர்கள், அம்மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மாணவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு, உதட்டில் தையல் போடப்பட்டது. ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து மாணவர்களிடம் விசாரிக்கின்றனர்.